top of page
Writer's pictureRoot

2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்

அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம்


 கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும்.அதற்குப்பின், 8 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்முயற்சி எடுப்பது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது


அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் வறுமை, ஊட்டச்சத்துக்குறைவு, குப்பைக் கழிவுகள், எழுத்தறிவின்மை போன்ற குறைகள் எல்லாம் கடந்த கால விஷயமாகி விடும் என்று மத்திய நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.  மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் அதிக வளர்ச்சி, சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள சமூகமாக இந்தியா உருவாகும் என்றும் அவர் கூறினார். 

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு இருக்கும் என்றும், அதன் பிறகு 10 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 


புதிய அறிவிப்புகள்


விவசாயிகள்

பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்இத்திட்டத்திற்காக 2019-20 நிதியாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கீடு ; 2018-19 திருத்திய மதிப்பீட்டில் கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடுராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்திற்கான ஒதுக்கீடு ரூ.750 கோடியாக அதிகரிப்புபசுமாடுகளின் நீடித்த இனவிருத்தி மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.1.5 கோடி மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துக்கென தனித்துறை உருவாக்கப்படும்.கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனுக்கு 2% வட்டி தள்ளுபடி ; கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதலாக 3 சதவீத வட்டி சலுகை.பேரிடர் காலத்தில் வழங்கப்படும் 2 சதவீத வட்டி தள்ளுபடி, தற்போது திருத்தியமைக்கப்பட்ட கடன் காலம் முழுவதற்கும் வழங்கப்படும். 22 வகையான பயிர்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விட குறைந்த்து 50% கூடுதல் விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்.கடந்த 5 ஆண்டுகளில் வட்டி தள்ளுபடி 2 மடங்கு அதிகரிப்புமண்வள சுகாதார அட்டை, வேப்பஞ்சாறு தடவிய யூரியா உரம் போன்றவை வேளாண் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.


தொழிலாளர்

அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 10 கோடி தொழிலாளர்களுக்கு நிலையான மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதைஉறுதி செய்ய பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்மாதம் ரூ.100/55 என்ற குறைந்த அளவிலான பங்களிப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள் 60 வயதை கடந்த பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.வேலை வாய்ப்புகள் விரிவாக்கம் ; தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் எண்ணிக்கை 2 கோடி அதிகரிப்புஅனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச வருமானம் கடந்த ஐந்தாண்டுகளில் 42% உயர்வு.


சுகாதாரம்

22ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படும்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

2019-20ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.


நேரடி  வரிகள்

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்குநடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த 3 கோடி வரி செலுத்துவோருக்கு ரூ.23,000 கோடிக்கு மேல் வரிச்சலுகைவருமானவரிக்கான நிரந்தரக் கழிவுத்தொகை ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்படும்.  வங்கி / அஞ்சலக முதலீடுகள் மூலம் வட்டியாக பெறப்படும் தொகைக்கு வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு      ரூ.10,000-லிருந்து ரூ.40,000-ஆக அங்கீகரிக்கப்படும்.தற்போதுள்ள வருமானவரி வீதங்கள் தொடரும்சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 2-ஆவது வீட்டிற்கான நியாயமான வாடகைக்கும் வரிவிலக்கு வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு ஊக்கமளிக்கப்படும்மாத சம்பளம் பெறுவோர் செலுத்தும் வீட்டு வாடகைக்கான வரிச்சலுகைக்கான உச்சவரம்பு ரூ.1,80,000-லிருந்து ரூ.2,40,000-ஆக உயர்த்தப்படும்.ஒரு சொந்த குடியிருப்புக்கான முதலீடு மூலம் பெறப்படும் ஆதாயங்களுக்கான சலுகை 2 வீடுகள் மூலம் கிடைக்கும்        ரூ.2 கோடி வரையிலான தொகைக்கும் நீட்டிக்கப்படும்ஃகுறைந்த முதலீட்டிலான வீடு வாங்குவோருக்கு, வருமானவரிச் சட்டம் 80 IBA-யின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகை 2020 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்.நியாயமான வாடகை, விற்பனை செய்யப்படாத தளவாடங்களுக்கான வரி விலக்கு காலம், ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.


நிதித் திட்டங்கள்

2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத்த்தில் 3.4%ஆக இருக்கும்.3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும்7 ஆண்டுகளுக்கு முன் 6%ஆக இருந்த நிதிப்பற்றாக்குறை 2018-19 திருத்திய மதிப்பீட்டில் 3.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.அரசின் மொத்த செலவீனம் 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் 13% அதிகரித்து ரூ.27 லட்சத்து 84 ஆயிரத்து 200 கோடியாக உள்ளது.2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் மூலதன செலவினம் ரூ.3,36,292 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு      2019-20-ல் ரூ.3,27,679 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தேசிய கல்வி இயக்கத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல்  20% அதிகரிக்கப்பட்டு ரூ.38,572 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஒதுக்கீடு 2019-20-ல் 18% அதிகரிக்கப்பட்டு ரூ.27,584 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.2018-19ல் ரூ.56,619 கோடியாக இருந்த ஷெட்யூல்டு வகுப்பினருக்கான ஒதுக்கீடு 35.6% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.76,801 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2018-19-ல் ரூ.39,135 கோடியாக இருந்த ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான  ஒதுக்கீடும் 28% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.50,086 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்டுவது என்ற இலக்கை அடைய முடியும் என அரசு நம்புகிறது.கடன் ஒருங்கிணைப்பை நிதிப்பற்றாக்குறையுடன் ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு அரசு கவனம் செலுத்தும்


ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

“நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்துவதற்கான முதல் உரிமை ஏழைகளுக்குத்தான் உண்டு” : நிதியமைச்சர்பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த கல்விநிறுவனங்களில் கூடுதலாக 25% இடங்கள் உருவாக்கப்படும்.நகர்ப்புற – கிராமப்புற இடைவெளியை ஈடுகட்டவும், கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் இலக்குடன் கூடிய செலவீனம்மின்சார வசதியை பெற விரும்பும் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு.சௌபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு.உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத்திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுமார் 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும்.மிகவும் பின்தங்கியிருந்த 115 மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு, விருப்ப மாவட்டங்கள் திட்டம்.2018-19-ல் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு உணவு தானியங்களை குறைந்த விலையில் வழங்க 2018-19-ல் ரூ.1,70,000 கோடி செலவு.தனியார் துறை ஒத்துழைப்புடன் 143 கோடி எல்இடி மின் விளக்குகள் விநியோகம்.எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் ஏழை & நடுத்தர வகுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வரை சேமிப்புஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 10 லட்சம் நோயாளிகள் இலவச சிகிச்சைப் பெற்றுள்ளனர்.ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு மருந்துப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க ஏதுவாக மக்கள் மருந்தக திட்டம்2014 முதல் அறிவிக்கப்பட்ட 21 எயம்ஸ் மருத்துவமனைகளில் தற்போது 14 மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ், அமைக்கப்படும்  கிராமப்புற சாலைகளின் அளவு மும்மடங்காக அதிகரிப்பு.17.84 லட்சம் குடியிருப்புகளில் 15.80 லட்சம் குடியிருப்புகளுக்கு முறையான சாலை இணைப்புபிரதமரின் கிராம சாலை திட்டத்திற்கு 2018-19 திருத்திய மதிப்பீட்டில் ரூ.15,500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20-ல் ரூ.19 ஆயிரம் கோடியாக நிர்ணயம்.2014-18 காலக்கட்டத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 1.53 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.


 வடகிழக்கு

 2018-19 நிதி ஒதுக்கீட்டில் 21% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.58,166 கோடியாக நிர்ணயம்அருணாச்சலப்பிரதேச மாநிலம் அண்மையில் விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளது.மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்கள் முதன்முறையாக இந்தியாவின் ரயில்வே வரைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.பிரம்மபுத்திரா ஆற்றில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி சரக்குப்போக்குவரத்து தொடங்கப்படும்.


 

ஒடுக்கப்பட்ட பிரிவினர்

இதுவரை அடையாளம் காணப்படாத சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் கட்டுப்பாட்டில் புதிய குழு ஒன்று உருவாக்கப்படும்.சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினர் மேம்பாடு மற்றும் நலனுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் புதிதாக நலவாழ்வு மேம்பாட்டு வாரியம் ஒன்று உருவாக்கப்படும்.


பாதுகாப்பு

முதன் முறையாக ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,00,000 கோடியை தாண்டியுள்ளது.


ரயில்வே

2019-20 நிதிநிலை அறிக்கையில் மூலதன ஆதரவு ரூ.64,587 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஒட்டுமொத்த மூலதனச் செலவு ரூ.1,58,658 கோடியாக இருக்கும்2017-18-ல் 98.4%-ஆக இருந்த செயல்பாட்டு செலவீனம் 2018-19 திருத்திய மதிப்பீட்டில் 96.2%ஆகவும், 2019-20 நிதி நிலை அறிக்கையில் 95%ஆகவும் இருக்கும்


பொழுதுபோக்கு தொழில்

இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றைச் சாளர அனுமதியைப் பெறவும், படப்பிடிப்பை எளிதாக்கவும் நடவடிக்கைதாமாக முன்வந்து வருவாயை தெரிவிக்க ஒழுங்குமுறை விதிகள்  உருவாக்கப்படும்திருட்டு வீடியோவை தடுக்க திரைப்பட சட்டங்களில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படும்


குறு, சிறு, நடுத்தர தொழில் மற்றும் வணிகர்கள் நலன்

ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்த சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு 2% வட்டி தள்ளுபடிசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து 25%


அளவிற்கு கொள்முதல் செய்யப்படும் அரசு அமைப்புகளுக்கு தேவைப்படும் பொருட்களில் 3% பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படுகிறது

உள்நாட்டு வர்த்தகத்திற்கு மீண்டும் முன்னுரிமை ; தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை, தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை என பெயர்மாற்றம் செய்யப்படும்.ஒரு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி வரை கடன் வசதி பெற ஏற்பாடு.அரசு மின்னணு சந்தை திட்டத்தால் சராசரியாக 25%-28% சேமிப்பு.


டிஜிட்டல் கிராமங்கள்

நாட்டில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.


இந்திய அரசு, சென்னை

37 views0 comments

Comments


bottom of page